இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் கல்கத்தாவில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைவர்கள் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கடமை விடுமுறை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுமுறை எடுப்பதால் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை பாதிக்கப்படுகிறது. விடைத்தாள்களை பெறுவது போன்ற காரணங்களுக்காக ஆசிரியருக்கு பணி விடுமுறை அளிக்கப்படுகின்றது.

இதனால் ஆசிரியர்கள் இல்லாததால் பாடத்திட்டத்தை முடிக்க முடியாமல் பள்ளிகள் திணறுவதும் தங்களுடைய கவனத்திற்கு வந்திருப்பதால் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் பல ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் பணி விடுப்பு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.