இந்திய ரயில்வே வாரியம் ஐந்து வருடங்களுக்கு பின்னர் போர்ட்டர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இந்தியாவின் 68 பிரிவுகளிலும் புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. லக்கேஜ் களின் எடை 40 கிலோவுக்கு மேல் இருப்பின் 340 ரூபாய், நோய் வாய் பட்ட நபரை ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றி செல்லும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 270 ரூபாய், போர்ட்டர்களுக்கு 180 ரூபாய் என பயணிகள் இனி செலுத்த வேண்டும்.

இந்த புதிய கட்டண முறை A1, A பிரிவை சேர்ந்த ரயில் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம் ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளின் விளையும் விரைவில் உயர்த்தப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளதால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.