இந்தியாவில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் சைக்கிள் வழங்கி வந்தன. இந்த திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. இந்த திட்டம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் இடைநீக்கமும் குறைந்தது. இந்த நிலையில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளதாக பெலாகாவியில் நடந்த சட்டப்பேரவை அமர்வின்போது பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் பயிலும் அனைத்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இது தொடர்பாக அரசு ஆலோசித்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.