இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியுடன் 2000 ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட தாள்களாக உள்ள நிலையில் அதிக அளவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 91110 ரூபாய் 500 கோடி நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் முழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. அதேசமயம் பொதுமக்கள் கள்ள நோட்டுகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.