ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்கனவே மூன்று பேர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலிப்பு, திடீர் மயக்கம் மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.