மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அஜர்பைஜானின் நக்சிவன் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பெரும் ராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது.

இந்த “கோழைத்தனமான” தாக்குதலுக்கு ஈரான் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அல்லியேவ் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். நக்சிவன் விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளி கட்டிடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ள நிலையில், இது ஈரானின் திசையிலிருந்தே வந்ததாக அஜர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், இந்தத் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள ஈரான், இது ஈரானின் அண்டை நாடுகளுடனான உறவைக் கெடுக்க இஸ்ரேல் செய்த சதி என்றும், இது ஒரு “False Flag” ஆபரேஷன் என்றும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

துருக்கி, அஜர்பைஜானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள நிலையில், கத்தார், சவூதி மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலும் அடுத்தடுத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் சம்பவங்கள் பதிவாகி வருவது உலகப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.