ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு மாதமாகப் போர் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
இது குறித்துப் பேசிய நெதன்யாகு, அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக ஈரான் அரசைத் தொடர்ந்து நசுக்கி வருவதாகவும், தற்போது ஈரான் அரசு நிலைகுலைந்து போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்கள் இன்னும் தொடரும் என்று எச்சரித்துள்ள அவர், விரைவில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கு பகுதியில் போர்ச் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது.
