அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன், உலகின் போர் நடக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று துணிச்சலாகச் செய்தி சேகரிப்பவர். சமீபகாலமாக ஈராக்கில் முகாமிட்டிருந்த அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் குறித்துத் தகவல்களைச் சேகரித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தின் அல் சடோன் பகுதியில் ஜெல்லி கிட்டில்சன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரைப் பட்டப்பகலில் கடத்திச் சென்றனர். இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஈராக் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பினர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட பத்திரிகையாளரைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.