மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஈரானிய மக்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் நாட்டின் ரயில்வே வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ரயில்களில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்பதே இந்த எச்சரிக்கையின் முக்கிய சாரம்சமாகும்.

குறிப்பாக, ஈரான் அரசு தனது ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல பொதுமக்களுக்கான ரயில்வே பாதைகளைப் பயன்படுத்துவதாகவும், அதனால் அந்த இடங்கள் தங்களின் இலக்காக மாறக்கூடும் என்றும் இஸ்ரேல் மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

ஏற்கனவே ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் ஈரானிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.