இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜாதே மற்றும் புரட்சிகரப் படைத் தலைவர் முகமது பக்வோர் ஆகியோர் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் 2025-ல் ஈரானின் ராணுவத் தளபதி ஹுசைன் சலாமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முகமது பக்வோர் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய ராணுவம், “ஆபரேஷன் ரோரிங் லயன்” என்ற பெயரில் ஈரான் தலைவர்களை குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனேயி மற்றும் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் ஆகியோரும் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரானிய ஊடகங்கள் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.