அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் எப்படி இவ்வளவு பலமாகத் திருப்பி அடிக்கிறது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இதற்குப் பின்னால் ரஷ்யா மற்றும் சீனாவின் மிகப்பெரிய ‘டெக்னாலஜி’ விளையாட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது. “எங்கள் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது, ஆனால் அந்தப் பிணைப்பு இன்றும் தொடர்கிறது” என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராஷி கொடுத்த அந்த ஒரு ஸ்டேட்மென்ட் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

​சீனா தனது 500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் மூலம் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் துல்லியமான இருப்பிடத்தை ஈரானுக்கு வழங்கி வருகிறது. முக்கியமாக, அமெரிக்காவால் ஹேக் செய்ய முடியாத ஒரு புதிய ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தைச் சீனா ஈரானுக்குக் கொடுத்துள்ளது. இதனால் ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்க ரேடார்களால் திசைதிருப்பவோ, சிக்னலை ஜாம் செய்யவோ முடியாமல் போயுள்ளது. மறுபுறம் ரஷ்யா தனது அதிநவீன செயற்கைக்கோள் ஒன்றை முழுமையாக ஈரானின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களின் ஹை-ரெசல்யூஷன் புகைப்படங்கள் ஈரானுக்குக் கிடைப்பதால், துல்லியமான தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.