தென்னாப்பிரிக்காவில் கார் கடத்தல்காரர்கள் கும்பல் ஒன்று, கார் ஒன்றைச் சூழ்ந்து கொண்டு வளைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டத் திட்டமிட்ட அந்தத் தருணத்தில், பதற்றமடையாத அந்த டிரைவர், மின்னல் வேகத்தில் காரை ரிவர்ஸ் கியரில் (Reverse Gear) மாற்றி, அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர் காட்டிய அந்தத் துணிச்சலும், சமயோசிதமான முடிவும் அவரது உயிரைக் காப்பாற்றியது.
In South Africa, a driver gets boxed in by suspected car hijackers. Instead of freezing or ramming forward, he instantly slams it into reverse and floors it, a masterclass in defensive driving that saved his life. pic.twitter.com/VBHbWrvR9G
— WTF Facts (@mrwtffacts) March 29, 2026
இந்தத் தற்காப்பு ஓட்டுதல் (Defensive Driving) காட்சியைப் பதிவு செய்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. “பதற்றத்தில் நிலைகுலைந்து போகாமல், சமயோசிதமாகச் செயல்பட்ட அந்த டிரைவரின் திறமை வியக்க வைக்கிறது” எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆபத்தான சூழலில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
