சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில் பலரும் உயிரையும், உடலையும் பணையம் வைத்து ரீல்ஸ் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண் சமையல் அறையில் கேஸ் அடுப்பில் பருப்பை வேக வைத்துவிட்டு, அருகில் நின்று ரீல்ஸ் செய்த காட்சி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் எடுப்பதிலேயே முழு கவனமாக இருந்த அந்தப் பெண், எதிர்பாராத விதமாக பாத்திரத்தின் மீது கை மோத, கொதித்துக் கொண்டிருந்த பருப்பு அவர் மீது கொட்டி விபத்துக்குள்ளானது.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், இது நிஜமான விபத்தா அல்லது வைரலாக வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்த நாடகமா என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். எவ்வாறாயினும், ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் பாதுகாப்பை மறந்து செயல்பட வேண்டாம் என்று பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.
