நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சுயநினைவின்றி கீழே விழுந்த சம்பவம், காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆனால், அந்த நேரத்தில் அங்கிருந்த மற்றொரு நபர், எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாகச் செயல்பட்டார்.
கீழே விழுந்தவருக்குச் சில நிமிடங்கள் சளைக்காமல் சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்த அந்த நபர், அவர் உயிர் பிழைக்கப் பெரும் முயற்சியை மேற்கொண்டார். அந்த நபரின் துரிதச் செயல்பாட்டாலும், விடாமுயற்சியாலும் பாதிக்கப்பட்டவர் மீண்டும் மூச்சு பெற்று மீண்டு வந்தார்.
தற்போது இந்த நெகிழ்ச்சியான காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. “ஒரு உயிர் காப்பாற்றப்படுவதைப் பார்ப்பது எவ்வளவு நெகிழ்ச்சியானது! அந்த நபரின் துணிச்சலும் மனிதாபிமானமும் போற்றுதலுக்குரியது” எனப் பலரும் தங்களின் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
A man collapsed and lost consciousness. A kind passerby stepped in, performed CPR for five minutes, and saved his life. Salute to her courage and compassion! 🙏👏 pic.twitter.com/eZIdjgZ55W
— This Account Makes You Happy (@FeelYouHappy) March 28, 2026
அவசரக் காலங்களில் முதலுதவி (First Aid) தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
