காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு புதுவயல் பகுதிக்குச் சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையின் போது அதிகாரிகளுடன் சீமான் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்று இருக்கும்போது, இதுவரை யாரையாவது கைது செய்துள்ளீர்களா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு புதுவயல் பகுதிக்கு செல்லும் வழியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை; அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்#NTK | #TNElections2026 | #Elections2026 |… pic.twitter.com/QCWegM25ek
— Dinakaran (@DinakaranNews) March 29, 2026
மேலும், தனது காரைச் சோதனை செய்வது போலவே முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் கார்களையும் சோதனை செய்ய உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என்றும் சீமான் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டார். இந்தச் சம்பவத்தால் காரைக்குடி சாலையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
