இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதாபிமானம் என்பது இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை இந்த பிஞ்சு குழந்தை நிரூபித்துள்ளது. தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு, அந்தச் சிறிய குழந்தை தனது முழு பலத்தையும் திரட்டி, கஷ்டப்பட்டு அடி பம்பை இயக்கி தண்ணீர் கொடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த நாயின் தாகம் தீர வேண்டும் என்பதற்காக அந்தச் சிறுவன் காட்டிய அக்கறை, பார்ப்பவர் எவரையும் நெகிழச் செய்கிறது.

​”தூய்மையான அன்பு என்பது சிறிய இதயங்களில் தான் குடி இருக்கிறது” என்பதற்குச் சான்றாக இந்த வீடியோ அமைந்துள்ளது. அந்த நாய் தாகம் தீரத் தண்ணீர் அருந்தும் அழகும், அதற்கு அந்தப் பிஞ்சு பாப்பா காட்டும் பேருதவியும் பலரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. பெரியவர்கள் செய்யத் தயங்கும் ஒரு செயலை, மிக எளிதாகச் செய்து காட்டிய இந்தச் சிறுவனின் மனிதாபிமானத்தை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.