பிரிட்டனின் பிராட்போர்ட் நகரில், வளர்ப்பு கோழிகளை மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ரேஹான் பைக் என்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூரச் செயலை அந்த நபரின் மனைவியே தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து வந்த திடுக்கிடும் உண்மையும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மொபைல் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், கணவனின் இந்த விகாரமான செயலை வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்ட அவரது மனைவிக்கு ‘சஸ்பெண்டட்’ (தற்காலிக) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த சம்பவத்தில், அந்த நபர் கோழிகளை “குடும்ப செல்லப்பிராணிகள்” என்று கூறி வளர்த்து வந்ததும், அவரது வக்கிரமான செயல்களால் பல கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த நபரின் செயலை மனிதநேயமற்ற கடுமையான மனப்பிறழ்வு எனக் கூறி கண்டித்துள்ளார்.
மேலும் விலங்கு நல அமைப்புகளும், சமூக வலைதளவாசிகளும் இத்தகைய மிருகத்தனமான குற்றங்களுக்கு இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
