பொது இடங்களான பேருந்து நிலையம், மெட்ரோ மற்றும் ரயில்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், அநாகரிகச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓடும் ரயில் ஒன்றில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை, எதிரே அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் அநாகரிகமாக வெறித்துப் பார்த்துக்கொண்டே, முகம் சுளிக்கும் வகையில் மிகவும் கேவலமான அசிங்கமான சைகைகளைச் செய்துள்ளார்.

அந்த வாலிபரின் வக்கிர புத்தியைக் கண்டு கொஞ்சம் கூடப் பயந்து பின்வாங்காத அந்தத் தைரியசாலிப் பெண், உடனடியாகத் தனது மொபைல் போனை எடுத்து அவனது அநாகரிகச் செயலை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by The Bharat Post (@thebharatpost_)

பொதுவாக வீடியோ எடுத்தால் பயந்துபோகும் ஆசாமிகளுக்கு மத்தியில், அந்த வாலிபன் தன் முகம் கேமராவில் பதிவாகிறது என்று தெரிந்தும், கொஞ்சமும் பயமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் தொடர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்து மோசமான சைகைகளைச் செய்துகொண்டே இருந்துள்ளான்.

நெஞ்சை உலுக்கும் இந்த வக்கிரமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நாடு எவ்வளவுதான் டிஜிட்டல் மயமாக முன்னேறினாலும், இந்த மாதிரி வக்கிர புத்தி கொண்ட மிருகங்கள் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறார்கள்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், “இந்த வீடியோவை அந்த வாலிபனின் குடும்பத்தினருக்கும், காவல் துறைக்கும் அனுப்பி அவனை உடனடியாகக் கம்பி எண்ண வைக்க வேண்டும்” என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வளைத்து வளைத்துக் கமெண்ட் செய்து சவுக்கடி கொடுத்து வருகின்றனர்.