கர்நாடக அரசு ஆனது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் 1.2 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைபெறுவார்கள் என்றும் இதற்காக அரசு 20 கோடி தொகை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்துவதில் தற்போது சிக்கல் நடைபெறுகிறது. இன்னும் முதல் மாத தவணை கூட கிடைக்காமல் இன்னும் பல லட்சம் பெண்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான உதவி தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் நவம்பர் மாதத்திற்கான தொகையானது 15ஆம் தேதிக்குள் பயனாளர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு தொகை விடுவித்த பிறகு ஆறு நாட்களில் மக்களின் கைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே பெண்கள் கவலைப்படாமல் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.