பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் இந்த திட்டத்தின் மூலமாக 14 ஆயிரம் கோடி நிதி உதவி விவசாயிகள் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் 15வது தவணைக்கான பணம் ந்த மாதத்தில் இருதியில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

மேலும் 15 வது தவணை பெற விரும்பு விவசாயிகள் கட்டாயமாக இ-கேவி செய்யும் முறையை செய்திருக்க வேண்டும் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in  சென்று முழு விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு மாவட்டம் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்தையும் தேர்வு செய்து இ கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும்.