IFS  அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் சிங்கம் மரத்தில் உள்ள இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த காணொளியுடன் அவர் “சிங்கங்கள் சில நேரங்களில் பச்சை இலைகளையும் சாப்பிடும் அதற்கு காரணம் அது சாப்பிட்ட ஏதாவது உணவு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி ஏற்பட்டால் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள சில இலை வகைகளை சிங்கம் சாப்பிடும் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கம் மட்டும் அல்ல எந்த விலங்காக இருந்தாலும் தன் உடல் நலத்திற்கு ஏற்றவற்றை அவைகளை தேடி சாப்பிடும்.