இயற்கை பேரிடர் காலங்களில் பல்வேறு சேதங்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக வாகனம் சேதாரம்  முக்கியமான ஒன்று. வாகனங்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைகிறது. மழைக்காலங்களில் இது போன்று அடிக்கடி ஏற்படுகிறது. இதை சமாளிக்க இன்சூரன்ஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி உள்ளது. காப்பீடு இல்லாமல் இது போன்ற சமயத்தில் முழு தொகையை செலுத்தி வாகனத்தை சரி செய்வதற்கு பதிலாக காப்பீடு தொகை பயன்படுத்தி வாகனங்களை சரி செய்யலாம். அது எப்படி என்று குறித்து பார்க்கலாம். வெள்ளத்தால் சேதமடைந்த  வாகனத்தை முதலில் காப்பீடு நிறுவனத்திற்கு வாகனத்தின் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.

சேதம் அடைந்த வாகனம் குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உதவிகரமாக இருக்கும். கார் சம்பந்தமான அனைத்து தகவலையும் சேமிக்க வேண்டும். இதில் கார் பதிவு எண், காப்பீடு எண், புகைப்படம் அனைத்து விவரங்களையும் சேமிக்கவும். வாகனம் எவ்வளவு சேதாரம் அடைந்துள்ளது என்பதை நிறுவனத்துடன் சேர்ந்து கணக்கீடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் பின்பற்றினால் உங்களுக்கு வேண்டிய காப்பீடு பணம் கிடைக்கும். மொத்தமாகவோ அல்லது படிப்படியாகவோ இந்த பணம் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.