இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, பெற்றோர் rte.tnschools.gov.in விண்ணப்பிக்கவும்.