நடிகர் விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் மீரா (17), மனஅழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஜெயம் ரவி, வெங்கட் பிரபு, சரத்குமார், கவுதம் கார்த்திக், குஷ்பு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இருளுக்கு பயப்படுவார் என்றும் தனியாக எங்கும் செல்வதில்லை என்றும் நடிகை சுதா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட பெண் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது புரியவில்லை. எப்போதும் குடும்பம், குழந்தைகள் பற்றி பேசும் தங்க மனிதர் விஜய் ஆண்டனி. நேற்று காலை 7.30 மணி வரை ஒன்றாக நடித்ததாக கூறியவர், கடவுள் அவருக்கு தைரியம் தரட்டும் என்றார்.