நடிகர் சிவகுமார் தான் சந்தித்த நண்பர்கள். குடும்ப உறவுகள் என 100 பேரின் வாழ்க்கையை திருக்குறளோடு ஒப்பிட்டு ” திருக்குறள் உரை திரையிடல் நிகழ்வு” என்ற விழாவை பல்லடத்தில் நடத்தினார். இதில் பேசிய நடிகர் சிவகுமார்,கொங்கு தமிழ் பாரம்பரியத்தை நான் விட்டு சென்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. ஏனெனில், இவையெல்லாம் எனது ரத்தத்தில் ஊறியவை. விநாயகர், முருகன், சிவன் என கடவுள்களை நாம் தான் உருவகபடுத்தி   வைத்துள்ளோம்.

ஆனால் படைப்பு கடவுளாக இருப்பவர்கள் தான் பெண்கள்.பெண்கள் தான் உலகின் படைப்பில் கடவுள், எனது தாய் இறந்துவிட்டார். எனக்கு இரண்டாம் தாயாக எனது மனைவி இருக்கிறார். அவரின் மடியிலேயே என் உயிர் பிரிவதை விரும்புகிறேன்” என உருக்கமாக பேசினார்.