தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு பழனிசெட்டிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குச்சனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் முத்துதேவன் பட்டி பிரதான சாலையில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்துருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.