மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில், 19 வயது இளைஞன் ஒருவன் இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. பரத்வாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இந்தச் சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறியுள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்கள், அந்த பிளாட்டில் நள்ளிரவு நேரங்களில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாகவும், மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் பலமுறை உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், நில உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்ததே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞன் மீது போக்சோ (POCSO) மற்றும் ஐடி சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நில உரிமையாளரின் பங்கையும் விசாரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
