கிழக்கு வடக்கு மாசிடோனியாவில் ஒரு கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் மாசிடோனியாவில் உள்ள உள்ளூர் பாப்  கிளப்பில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதனால் கிளப்பில் சுமார் 500 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில் வான வேடிக்கை சாதனங்களை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கிளப்பின் மேற்கூரை எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களால் கட்டப்பட்ட கூரை  என்பதால் உடனடியாக தீ அந்த டிஸ்கோ கிளப் முழுவதும் பரவி உள்ளது என உள்துறை அமைச்சர் டோஸ்கோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த கிளப்பில் பெரும்பாலாக உயிரிழந்தவர்கள் இளைஞர்கள் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். தீப்பிடித்ததால் பதட்டத்தில் வெளியேறும் போது நெரிசலில் சிக்கி பெரும்பாலானோர் இறந்துள்ளனர்.

சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் 7 நாள் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணையில் இந்த இரவு நேர கிளப் சட்டபூர்வமான உரிமம் தராமல் நடந்து வந்துள்ளது. எனவே இந்த சம்பவம் ஊழல், லஞ்சம் காரணமாக சட்டபூர்வமாக உரிமம் பெறாத கிளப்பை நடத்தியது குறித்து விசாரணையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அந்நாட்டு குடியரசுத் தலைவர் கோர்ட்டானா சில்ஜானோவ்ஸ்கா கூறியதாவது, “இந்த சம்பவம் குறித்து முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊழல், லஞ்சம் காரணமாக இளம் உயிர்கள் தியாகம் செய்யப்படுவதை அனுமதிக்க கூடாது” என தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.