இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் instagramல் ரீல்ஸ்களை பார்ப்பதற்காக பல மணி நேரங்களை செலவிடுகின்றனர்.

இவர்களுக்காக மெட்டா நிறுவனம் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. அதுதான் Night time Nudge. இன்ஸ்டாகிராம் இரவில் பத்து நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை செய்தி வரும். பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு இரவு 10 மணிக்கு மேல் இந்த அறிவிப்பு வரும்.