கூகுள் பே மூலம் யுபிஐ முறையில் உலக நாடுகளில் இந்தியர்கள் பணம் செலுத்தும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா டிஜிட்டல் சேவை மற்றும் என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் google pay மூலம் வெளிநாடுகளில் UPI பேமெண்ட் மேற்கொள்ளலாம். அதே சமயம் உலக நாடுகளுக்கு இடையே பணம் அனுப்பும் நடைமுறையும் விரைவில் எளிதாக்கப்பட உள்ளது.