இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு சேவைகளில் முன்னணி வகித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து airtel, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களும் தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. நிறுவனங்கள் அனைத்துமே பயனர்களை கவரும் விதமாக அதிக டேட்டா திட்டங்களை வழங்குகிறது. குறைவான விலைக்கு அதிக டேட்டா வழங்கக்கூடிய பல திட்டங்கள் உள்ளன.

அதன்படி ஜியோ நிறுவனம் 299 ரூபாய், 399 ரூபாய், 999 ரூபாய் என்ற மூன்று நிலைகளில் முறையே 14 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்ட தினசரி மூன்று ஜிபி டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது. அதனைப் போலவே ஆற்றல் நிறுவனம் 499 மற்றும் 699 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் மற்றும் 56 நாட்கள் உடன் 3 ஜிபி டேட்டா திட்டத்தை வழங்குகிறது. அடுத்து வோடபோன் ஐடியா நிறுவனம் 359 ரூபாய், 499 ரூபாய், 601 ரூபாய், 699 ரூபாய் மற்றும் 901 ரூபாய் திட்டங்களை பல்வேறு வகையான வேலிடிட்டி உடன் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் அனைத்து திட்டங்களுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய பலன்கள் உள்ளன.