கோவை மற்றும் பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில் அதிக அளவில் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் கோவையில் இருந்து புறப்பட்ட காலை பெங்களூர் செல்லும் வகையில் ரயில்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் இன்று வரை இரவு நேர ரயில் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் கோவில் இருந்த பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இயக்கப்படும் 40 வந்தே பாரத் ரயில்களில் காலை ஐந்து மணிக்கு புறப்படும் ஒரே ரயில் இதுதான். ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று மதியம் தொடங்கிவிட்டது.