திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநில வாலிபர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்கு சென்றபோது வட மாநில வாலிபரான ஏக்ரமுல் அலி என்பவர் டீ குடித்துவிட்டு வருகிறேன் எனக்கூறி அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமியின் வாயைப் பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதனால் சிறுமி அவரது கையை கடித்து விட்டு சத்தம் போட்டதால் சாலையில் சென்ற பொது மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

இதனை பார்த்ததும் வாலிபர் தப்பியோட முயற்சி செய்தார். இருப்பினும் பொதுமக்கள் விடாமல் துரத்தி சென்ற வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.