கர்நாடக மாநிலத்தில், 25 வயது இளம்பெண் ஒருவர் மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பசப்பா நிங்கப்பா மற்றும் ரமேசப்பா ஆகிய இருவரும் அவரைப் பலாத்காரம் செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டிய போதிலும், அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்ததைச் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயங்கரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.