நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை  திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நயன்தாரா சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மகன்கள் மற்றும் மனைவியோடு அவருடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவருக்கு துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பேரீச்சம் பழம் கோப்பையை விக்னேஷ்க்கு பரிசாக கொடுத்துள்ளார் .இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவின் முக்கிய பிரபலங்களில் ஒருவனாக விக்னேஷ்க்கு இப்படி ஒரு பிறந்தநாள் பரிசு வரும் என்று அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.