சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெல்லிக்கொல்லை காட்டுநாயக்கன் தெருவில் சத்தியசீலன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். சத்தியசீலன், தனது நண்பர்களுடன் இரவு 10.30 மணியளவில் வடலூரிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் சென்ற சத்தியசீலன் சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் மற்றும் ஜல்லி குவியலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மேலும் சம்பவ இடத்திலேயே சத்தியசீலன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சத்தியசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
