
தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுக ஜெயிக்காது அதிமுக ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தார். அதோடு முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பித்தான் ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்திக்கிறார் கண்டிப்பாக வருகிற தேர்தலில் அந்த கூட்டணி நீடிக்காது என்று கூறினார். அதோடு திமுகவின் வாக்கு வங்கி நாடாளுமன்ற தேர்தலில் 7 சதவீதம் வரை குறைந்து விட்டதாகவும் அதிமுகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றும் மக்கள் மத்தியில் திமுகவின் மதிப்பு குறைந்து அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, திமுக அரசின் மீது குறை கூறுவது மட்டும் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை வேலையாக இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகையை கடன் வாங்கி தான் பெண்களுக்கு திமுக அரசு கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டு இருந்த நிலையில் இதற்கும் முதல்வர் பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் கூறும் போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலையே கிடையாது. டிவியில் முகத்தை காட்ட வேண்டும் என்பதற்காக சும்மா எதையாவது பேசிக் கொண்டிருப்பார். அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் மீது அவதூறு பரப்புகிறார் என்று கூறினார்.