உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் ரவீந்திர பிரகாஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் டாக்டர் ஆக இருக்கும் நிலையில் அதே பகுதியில் ஒரு கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல் வலிக்காக இளம்பெண் ஒருவர் சிகிச்சை பெற வந்தார். இந்த பெண்ணிடம் டாக்டர் பல்லை பிடுங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்காக ஊசி போட்டுள்ளார். அவர் மயக்க ஊசி போட்டு அந்தப் பெண் மயங்கிய நிலையில் அதனை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்.
இதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்ட டாக்டர் அடிக்கடி அந்த இளம் பெண்ணை மிரட்டிய நிலையில் இது பற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் டாக்டர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
