அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகவே கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனால், அவர் அதிமுகவிலிருந்து விலகலாம் என கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (செப்.2) ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தன்னை ஆதரிக்கும் முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “என்னுடைய நிலைப்பாட்டை வரும் 5ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். மனம்விட்டு அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவேன்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் எந்தவொரு புதிய முடிவையும் எடுக்க வாய்ப்பு உள்ளது என்பதாலேயே, அதிமுக வட்டாரங்களில் குழப்பம் மற்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.