உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருவதால் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவரும் விதமாக ரீல்ஸ், ஸ்டோரி மற்றும் அவதார் உள்ளிட்ட பல அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் மிகவும் பிரபலமாகிவிட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் சேட் செய்ய உதவும் வகையில் எமோஜி மற்றும் அவதார அம்சங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது instagram-யில் டைனமிக்ஸ் சுயவிவர புகைப்படம் என்ற அம்சத்தை அறிமுகம் படுத்தியுள்ளது.

இதன் மூலமாக நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொபைலில் அவதார் படங்களை மாற்றிக் கொள்ள முடியும். அதாவது எடிட் ப்ரொபைல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டைனமிக் அம்சத்தை பயன்படுத்தி. இதன் மூலமாக ப்ரொபைல் போட்டோவை ஸ்பைப் செய்வதன் மூலம் அவதார் உருவத்தையும் மீண்டும் ஸ்வைப் செய்து உங்களது ப்ரோபைல் போட்டோவை நமது இன்ஸ்டாகிராமில் மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.