புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர்களின் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. அதன்படி பாக்ஸ் டிக்கெட் 160 ரூபாய் இருந்து 180 ரூபாயாகவும், பால்கனி டிக்கெட் 150 ரூபாய் இருந்து 170 ரூபாயாகவும், முதல் வகுப்பு டிக்கெட் 100 ரூபாய் இருந்து 130 ரூபாய், இரண்டாம் வகுப்பு டிக்கெட் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாய், மூன்றாம் வகுப்பு டிக்கெட் 50 ரூபாய் இருந்து 60 ரூபாயாகவும் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நவம்பர் 10 இன்று முதல் அமலுக்கு வருகிறது.