தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதி வேட்பாளர்களையும் சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து இன்று மாஸாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்தார் தலைவர் விஜய். ஆனால், “பிளான் எல்லாம் ஓகே.. ஆனா பெர்மிஷன் எங்க?” எனத் தேர்தல் அதிகாரிகள் போட்ட திடீர் தடையால் தவெக தரப்பு ஆடிப்போயுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி பொதுக்கூட்டம் நடத்த முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறாததால், இன்றைய நிகழ்ச்சிக்குத் தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​இந்தத் திடீர் அனுமதி மறுப்பால், இன்று நடைபெறவிருந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 234 வேட்பாளர்களும் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நடந்த இந்த ‘ரூல்ஸ்’ சிக்கல் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 29-ம் தேதியாவது எந்தச் சிக்கலும் இல்லாமல் தளபதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.