தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாமக மற்றும் தேமுதிகவை இழுக்கத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்துவிட்ட நிலையில், இந்த இரு கட்சிகள் மட்டும் இன்னும் மௌனம் காப்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒரு புதிய கட்சி இணையப்போவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அந்தப் புதிய கட்சி பாமகவா அல்லது தேமுதிகவா என்ற விவாதம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
