பீகார் மாநிலம் பாட்னாவில், நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்னாவின் அகம்குவான் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜிம் ட்ரைனர் ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு இன்னும் 15 நாட்களில் வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், தனது காதலனைச் சந்திப்பதற்காக அந்தப் பெண் சென்றுள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருந்தபோது, அந்தப் பெண்ணுக்குத் திடீரென கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. பதற்றமடைந்த காதலன், அவரைத் தனது ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்று  ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், பெண்ணை அனுமதித்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இளம்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததைக் கண்ட மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக சித்ரகுப்தா நகர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதலில் வாக்குமூலம் அளிக்க மறுத்த அந்தப் பெண், பின்னர் நடந்தவற்றைத் தெரிவித்தார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடனேயே உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், “இது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரம். 15 நாட்களில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ள நிலையில், இப்போது புகார் அளித்தால் திருமணம் நின்றுவிடும்,” எனக் கூறி எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்துள்ள போலீசார், பாட்னா கிழக்கு மண்டல எஸ்பி பரிச்சய குமார் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜிம் ட்ரைனரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.