சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக ராஜ்கிரன், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்து இன்று காலை  மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவுடன் நேற்று எடுத்த புகைப்படத்தை நடிகை ஹரிபிரியா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஹரிபிரியாவின் இன்ஸ்டா பதிவில், இன்னும் இதை நம்ப முடியவில்லை.. உண்மையான கலைஞனுக்கு முடிவே இல்லை.. எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் இருப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.

மாரிமுத்துவின் கடைசி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை!