திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. அதாவது படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து யு, யுஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த முறையில் திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A   ஆகிய ஐந்து வகை தணிக்கை சான்றை வழங்கும் வகையிலான மசோதா மத்திய அமைச்சரவையில் நிறைவேறியுள்ளது. இது விரைவில் சட்டமாகும் என தெரிகிறது. இதில் U/A 7+, U/A 13+, U/A 16+,  ஆகிய மூன்று விதமான புதிய தணிக்கை சான்றிதழுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.