நேற்று சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக தென் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியும் அனுராக் சிங் தாகூர், விளையாட்டு, சினிமா ஆகிய இரண்டும் மென்மையான சக்தி உடையவை. இந்தியாவில் அதிக அளவில் திரைப்படங்கள் தயாரிக்கும் நகரமாக சென்னை விளங்கி வருகிறது. மத்திய மாநில அரசுகள் சினிமா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். இந்தியாவில் அதிக அளவில் வட்டார கதைகள் இருக்கின்றன.

அவற்றை உலகுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும். உலக அளவில் திரைப்பட திருட்டு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் வருடத்திற்கு 19000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் புதிய ஒளிப்பதிவு சட்டம் கொண்டு வரப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படத்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்