1969 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்கா சாதனை புரிந்தது. அதன் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் முதலாக நிலவில் கால் பதித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதனிடையே 50 வருடங்கள் கழித்து மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா கையில் எடுத்தது. அதன்படி அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா 2024 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முடிவில் இருந்தது.

இதற்காக முதற்கட்ட விண்கல சோதனையும் முடிவடைந்திருந்தது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் நான்கு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்த நிலையில் சில தொழில் நுட்ப சிக்கல்கள் காரணமாக 2025 ஆம் ஆண்டு தான் விண்கலம் நிலவுக்கு ஏவப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்படுவது 2026 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.