நாய்களை சமைத்து உணவாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை தென்கொரியாவில் இருந்து வருகிறது. மனிதர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ளும் நாய்களை கொன்று உணவாக உண்பதை தடை செய்ய வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தென்கொரியா நாடாளுமன்றத்தில் நாய் இறைச்சிக்கு தடை விதித்து மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் நாயை உணவுக்காக கொலை செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 19 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதேபோன்று நாய் இறைச்சியை விற்பனை செய்பவர்களுக்கும் இரண்டு வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் தான் நடைமுறைக்கு வர இருக்கிறது. எனவே நாய் இறைச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மாற்று வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மூன்று வருடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.