ரயில் ஜெனரல் கோச்களில் பயணிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் ஆரோக்கியமும் தரமான உணவுகள் வழங்க எக்கனாமி மீல் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 20 ரூபாய்க்கு உணவு வழங்குகின்றது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிளாட்பார்ம்களில் ஜெனரல் கோச் பெட்டிகளுக்கு அருகே கிடைக்கும் வகையில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மெனுவை தற்போது ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி ஏழு பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா ஆகியவை அடங்கும். 50 ரூபாய்க்கான காம்போ பேக்கில் சோறு, ராஜ்மா, கிச்சடி குல்சா, பாவ் பஜ்ஜி மற்றும் மசால் தோசை ஆகியவை அடங்கும்.